/* */

காஞ்சிபுரம் கோயில்களின் நீர் தடங்களை கண்டறிந்து புனரமைப்பு பணி துவக்கம்

காஞ்சிபுரம் கோயில்களின் நீர் தடங்களை கண்டறிந்து புனரமைப்பு பணி மாநகராட்சி சார்பில் துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கோயில்களின் நீர் தடங்களை கண்டறிந்து புனரமைப்பு பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் குளத்திற்கு வரும் நீர் தடங்களில் ஆய்வு மேற்கொண்டு நீர் செலுத்தப்படுகிறது.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் , சைவ , வைணவ , அம்மன் திருக்கோயில்கள் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இப் திருக்கோவிலுக்கு அருகிலேயே குளங்களும் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் இத்திருக் குளங்களில் நீர் சேமிப்பது குடிநீர் ஆதாரத்திற்கு பெரிதும் உதவும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருக்குளத்திற்கு மழை பெய்யும் காலங்களில் மாடவீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் வழிந்தோடும் நீர் நேரடியாக திருக்குளத்திற்கு செல்லும் வகையில் கட்டமைப்பு இருந்துள்ளது.

நாளடைவில் இது போன்ற கட்டமைப்புகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள் முற்றிலும் அழிந்து மறைந்து போயிருந்தது. கடந்த 2015 முதல் பெய்து வரும் கனமழையின் போது ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் சென்ற நிலையில் கூட சில திருக்கோயில் குளங்களில் சிறிதளவு நீர் இருப்பு இல்லை‌ என்பது வருத்தமான செய்தியாகவே காஞ்சி நகர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இருந்தது.

தற்போது மாநகராட்சி காஞ்சிபுரம் நகரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில் திருக்குளங்களை புனரமைத்து நீர்நிலைகளாக மாற்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக்கும் பணிகளை துவக்கிட மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் முடிவு செய்து அதன்படி , ஆணையாளர் கண்ணன் பணிகளை துவக்கினார்.

இதில் முதலாவதாக பயன் அடைவது பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையதுமான காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில் அருகில் படிக்கட்டுகளுடன் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது.ஏராளமான குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள இக்குளத்தில் தண்ணீர் இருந்தால் அருகில் உள்ள வீடுகளில் நீர்ஆதாரமும் பெருகும்.

இதற்காக கடந்த 1980 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வேசாலை, வைகுண்டப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு ஆகிய பகுதிகள் வழியாக பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து மழைநீரை நிரப்பியிருக்கின்றனர்.

காலப்போக்கில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூடப்பட்டு அதன் மேல்பகுதியில் சாலையும் போடப்பட்டிருந்ததால் மழைநீர் குளத்துக்கு வருவது தடைப்பட்டிருந்தது.

இதனையறிந்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் குளத்துக்கு மழைநீர் வரும் குழாய்களை கண்டுபிடிக்குமாறு பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாநகராட்சி பொறியாளர் கணேசன்,உதவிப் பொறியாளர் சரவணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பூமிக்கடியில் செல்லும் குழாய்களை கண்டு பிடித்ததுடன் அவற்றின் மூலம் மழைநீர் சீராக செல்லும் வகையில் பொது நிதியிலிருந்து ரூ.15லட்சம் மதிப்பில் கால்வாயும் அமைத்தனர்.

பின்னர் மாநகராட்சி குடிநீர் லாரி மூலம் அக் கால்வாயிலும், குழாய்களிலும் தண்ணீர் தெப்பக் குளத்துக்கு போகிறதா என ஆய்வு செய்தனர்.ஆய்வின் முடிவில் தெப்பக்குளத்துக்கு மழைநீர் செல்வதை உறுதி செய்தனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் தெப்பக்குளத்துக்கு செல்லும் வகையில் குழாய்களை கண்டுபிடித்த அதிகாரிகளை அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 16 Oct 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  2. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  4. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  7. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  10. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...