/* */

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!
X

காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் ஆங்காங்கே திருட்டுத்தனமான கூடுதல் விலைக்கு மது விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் வெளியிட்ட செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை மற்றும் ஊறல்கள் போடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 130 வெளிமாநில பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் 340 லிட்டர் மது ஊழல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மது வேட்டைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தாலா அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044 - 27236111 மற்றும் தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண் 044 - 2723800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 11 Jun 2021 6:01 AM GMT

Related News