/* */

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 9 விண்ணப்பம் வாங்கி சென்ற வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக 9 வேட்பாளர்கள் விண்ணப்பம் வாங்கி சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 9 விண்ணப்பம் வாங்கி சென்ற வேட்பாளர்கள்
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அலுவலராக பணியாற்றி வரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளது எனவும் , இன்று 9 வேட்பு மனுக்களை அரசியல் கட்சியினர் பெற்று சென்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அட்டவணையின் படி தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வாக்குபதிவு நடைபெற உள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வியிடம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் , வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர் தேர்தல் ஆணைய விதிகளின்படி அவருடன் நான்கு பேர் அனுமதிக்கப்படுவார்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதனைப் பார்க்கும் விதத்தில் டிவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையும் இரண்டு கட்ட சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர்.

வளாகம் முழுவதும் வெளிநபர் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கூடாத வண்ணம் காவல்துறையினர் மூன்று நுழைவாயிலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது மாடியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டுறை மற்றும் காணொளி காட்சி கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச் செல்வி இன்று தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் புகார்கள் பதிவுகள் குறித்து கேட்டறிந்து அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் ஆட்சியருக்கு விளக்கினர்.

மேலும் புகார்கள் பதிவு செய்யப்படும் கணினி செயலியையும் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து காணொளி கண்காணிப்புக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தேர்தல் குறித்த விவரங்களை பதிவு செய்யும் விவரங்கள் உள்ளிட்டவைகளையும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இன்று வேட்பு மனு காலை பத்து மணிக்கு துவங்கிய நிலையில் மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது. ஒன்பது நபர்கள் வேட்பு மனுவை இன்று பெற்று சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரக அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2024 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...