/* */

காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் சார்பில் கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் 41 வது நினைவு தினம் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் சார்பில் கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு
X

காஞ்சிபுரத்தில் மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் 41 வது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த கக்கனின் 41 வது நினைவு நாள் நிகழ்ச்சி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் , பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கடைபிடிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 1908 ஆம் வருடம் சிறிய கிராமத்தில் பூசாரி கக்கன் - குப்பு இவர்களுக்கு மகனாக பிறந்தவர் கக்கன். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற கக்கன், திருமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி படித்து வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாத காரணத்தினால் படிப்பை கைவிட்டார். மாணவர் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

மகாத்மா காந்தி மதுரைக்கு வந்த போது அவருக்கு உதவியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1952 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பின்னர் காமராஜர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை , ஆதிதிராவிடர் நல த்துறை, விவசாயத் துறை , உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்று திறம் பட பணியாற்றி சிறந்த உதாரணமாக இன்று வரை பேசப்பட்டு வருகிறார்.

தனது வயது மூப்பின் காரணமாக அரசு மருத்துவமனையில் கூட தான் யார் என்று கூறாமல் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதியிலேயே பெற்று இறுதி காலம் வரை வாழ்ந்தார்.

இறுதியாக 1981 டிசம்பர் 23ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இன்றைய அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக சமூக ஆர்வலர்கள் முதல் பேச்சாளர்கள் வரை இவரைப் பற்றி கூறாமல் இருக்க இயலாது.

இந்நிலையில் இன்று அவரது 41 வது நினைவு தினம் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் சார்பில் மாநகர தலைவர் நாதன் தலைமையில் காந்தி சாலை பெரியார் தூண் அருகே அவரது திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், காஞ்சி மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநில பொதுச் செயலாளர் (எஸ். சி. எஸ். டி. பிரிவு) கன்னியப்பன் , மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் லோகநாதன், அன்பு , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கல்வெட்டுடன் கூடிய காங்கிரஸ் பேரியக்க கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Dec 2022 8:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?