/* */

காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெற்று, விவசாயிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேரடி அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள்   முன்னணி சார்பில் சாலை மறியல்.
X

காஞ்சிபுரத்தில்  ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

மூன்று வேளாண்மை சட்டங்களை கடந்த ஆண்டு பாஜக அரசு அமல்படுத்தியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக தெரிவித்த மத்திய அரசு விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டது.

இதனை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் காஞ்சிபுரம் தேரடியில் செயலாளர் நேரு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் , அரசு விவசாயிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு ஆதார விலையை சட்டமாக்குதல், அக்னிபாத் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இனி தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தினர் இவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


Updated On: 31 July 2022 6:30 AM GMT

Related News