/* */

காஞ்சிபுரம் சரகம் 84 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 10 வருடம் பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சரகம் 84 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு
X

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்தியபிரியா

காஞ்சிபுரம் சரக காவல் துறையின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய காவல் மாவட்டங்கள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பணிகளை இருபத்தி நான்கு மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் காவல் சரகத்தில் காஞ்சிபுரத்தில் 30 தலைமை காவலர்களும் செங்கல்பட்டில் 32 தலைமை காவலர்களும் திருவள்ளூரில் 31 காவலர்கள் என 93 காவல்துறையினர் கடந்த 25 வருடங்களாக காவல்துறையிலும், கடந்த பத்தாண்டுகளாக தலைமை காவலர் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் இதில் எந்த ஒரு புகாரும் இன்றி செயல்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இருபத்தி ஒன்பது தலைமை காவலர்களும், செங்கல்பட்டில் 28 தலைமை காவலர்களும் , திருவள்ளூரில் இருபத்தி ஏழு தலைமை காவலர்களும் என 84 தலைமைகளுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.

விடுபட்ட 9 தலைமை காவலர்களின் பதவி உயர்வு புகார் நிறைவு பெற்றதும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!