/* */

காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமா ? திருடர்களின் புகலிடமா?

காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமாகவும், திருடர்களின் புகலிடமாகவும் மாறி வருவதாக காந்திய மக்கள் இயக்கம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தது.

HIGHLIGHTS

காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமா ? திருடர்களின் புகலிடமா?
X

பட்டு நகரம் , கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தின் நகரின் மையத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இங்கு நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட வகையில் பேருந்துகள் இயங்குகிறது.

இந்நிலையில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் உயர்ந்த சேவையை வழங்காமல் பயணிகள் மற்றும் பொது மக்கள் விரோத செயல்களுக்கு இருப்பிடமாக உள்ளது


பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி குடிகாரர்களின் மையமாகவும் , பேருந்து நிலையம் முழுவதும் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கூட இல்லாததால் குற்றவாளிகள் கூடராமாக இருந்து நாள்தோறும் குற்றச்செயல் நடைபெறுகிறது.

பேருந்து நிலையம் முழுவதும் சிறார்கள் பிச்சை எடுப்பதும் , திருநங்கைகள் பொதுமக்களிடம் அடாவடியாக பணம் வசூலிப்பது என பல நிகழ்வுகள் நடந்து வருவது மனவருத்தத்தை அளிக்கிறது.

பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு காவலர்களின் ரோந்து பணி இல்லாததால் அனைவருக்கும் சாதகமாக உள்ளது.

இது போன்ற அவல நிலைகளை கலையவே காவல் நிலையம் , பொதுமக்களின் பாதுகாப்புக்கு சிசிடிவி கேமராக்கள், தரமான குடிநீர் , பாலூட்டும் அறை திறப்பு என அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிின்மனு அளிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்

Updated On: 23 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா