/* */

காஞ்சிபுரம்: 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்த அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 41 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை 4 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்த அதிமுக வேட்பாளர்
X

4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சிந்தன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளுக்கான வேட்புமனு துவங்கிய நிலையில் பிராச்சார நேரத்தில் 36வது வார்டு அதிமுக வேட்பாளர் மரணம் அடைந்தார். இதனால் ஒரு வார்டு தேர்தல் நிறுத்தப்பட்டு மீதமுள்ள 50 ஆண்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 41 வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளராக சிந்தன் என்பவரும், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்மநாபன் என்பவரும் நேரடி களத்தில் இருந்தனர். இதுமட்டுமில்லாமல் அப்பகுதியை சேர்ந்த குமரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேசன் என சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பதிவான 1882 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் சிந்தன் 515 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பத்மநாபன் 511 வாக்குகளும் இதில் 4 வாக்குகள் கூடுதலாக பெற்றதால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வார்டில் சுயேச்சைகளாக போட்டியிட்ட குமரன் 265 வாக்குகளும் கிருஷ்ணமூர்த்தி 398 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?