/* */

காஞ்சிபுரத்தில் 569 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கடனுதவி வழங்கல்.. அமைச்சர் பங்கேற்பு…

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 569 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கோடி மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 569 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கடனுதவி வழங்கல்.. அமைச்சர் பங்கேற்பு…
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் அன்பரசன் நிதி உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்ற விழாவில் 569 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கோடி வங்கிகடன் வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர் வகைச் சார்ந்த அனைத்து குடும்பங்களில் உள்ள பெண்களை மகளிர் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைந்து அவர்களுக்கு சுழல் நிதி ரூ. 15000 மற்றும் சமுதாய முதலீட்டு நிதி ரூ. 1.50 லட்சம் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார உயர்விற்கும், சுயதொழில் செய்வதற்கும் வங்கிக்கடன் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதற்கான அடிப்படை கட்டமைப்புகளான காளான் வளர்ப்பு கூடம், பணிக்கூடங்கள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்து தரப்பட்டு வருகிறது.

இளைஞர் நலன் மேம்பட வேலை வாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலையின்மை நிலை இல்லாத மாநிலமாக மாறிட சிறப்பு திட்டங்களான வேலை வாய்ப்பு முகாம்கள், இளைஞர் திறன் திருவிழா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏழை பெண் விவசாயிகளைக் கொண்டு உற்பத்தியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.2 லட்சம் கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது. பண்னை சாரா பெண் தொழில் முனைவோர்கள் கண்டறியப்பட்டு 150 நபர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு குழுவிற்கு தொழில் மேம்படுத்தும் வகையில் ரூ. 50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 569 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 44.91 கோடி வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன என அமைச்சர் அன்பரசன் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம். திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் திருமேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!