/* */

காஞ்சிபுரம் : 400 இடங்களில் 19வது மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 ஆவது மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு 400 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 400 இடங்களில் 19வது மெகா தடுப்பூசி முகாம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இளைஞர்கள்.

கொரோனா மற்றும் அதைச்சார்ந்த ஒமிக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்குமேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அனைவருக்கும் ஒட்டு மொத்த தடுப்பூசியை உறுதிபடுத்தும் வகையில் குறிப்பாக முன்களப் பணியாளர்களுக்கு தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் அறிவுறுத்தியபடி 10.01.2022 லிருந்து முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முன் கள மற்றும் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன் கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 7479 பேர் உள்ளனர்;, இரண்டாம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது வருகிற கோவீஷீல்டு) செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது, இதுவரை 1948 பேர் மட்டுமே (26%) தடுப்பூசி செலுத்தியுள்ளனர்,

காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும். இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (77%) இலக்கையே எட்டியுள்ளது.

கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் ஆகும்.

இதுவரை 2,07,250 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

எனவே பயனாளிகளை நேரிடையாக , தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும். மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும், இதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும், இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என இந்திய மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது,

நம்முடைய குடும்பத்தினரும். குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கா இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 400 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Updated On: 22 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி