/* */

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பாஜக கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பாஜக கோரிக்கை
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும் காயத்ரி ரகுராம்

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இச்செயற்குழு கூட்டத்தில் , தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து ஊழல் ஆட்சியின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து அவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், காஞ்சி மாவட்டத்தில் அரசு சட்ட மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு துரிதகரியில் செய்து தர வேண்டும், குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமர் ஆதிஈஸ்வரர் மற்றும் ராம நாரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள நிலத்தில் உள்ள குடியிருப்புகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஏற்படுத்த இந்து சமய அறநிலைத்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் கூறுகையில், கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பாலியல் விவகாரங்கள் இருந்தாலும், மர்ம மரணங்களுக்கு பல்வேறு நாடகங்களை நடத்திய கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு வலைதளங்களிலும் இது குறித்து கருத்து தெரிவிக்கவும் அவரது குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தீர்வாக சிபிசிஐடி விசாரணை ஒன்றே தமிழக பாஜகவின் முக்கிய கோரிக்கை எனவும், பொதுமக்கள் அமைதியான முறையில் வன்முறை இன்றி இப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கின்றோம் என கூறினார்

இம்மாநில செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வாசன் மாவட்ட துணை தலைவர் எல்லம்மாள்குணா, நகர தலைவர் ஜீவானந்தம் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...