/* */

காஞ்சிபுரம்: 11,149 நபர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பயிர்க் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: 11,149 நபர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கல்
X

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை,  விற்பனைக்காக உலர வைத்துள்ள களம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், மூன்று தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 93 சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இதன் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்கள், விதை, உரங்கள், இடுபொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயனடையும் வகையில் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு, 70 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது வரை 11 ஆயிரத்து 149 விவசாயிகளுக்கு, ரூபாய் 67.20 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?