/* */

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை. மீறினால் கடும் நடவடிக்கை.

தேர்தல் வாக்குப்பதிவு அன்று தொழிலாளருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை. மீறினால் கடும் நடவடிக்கை.
X

 வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வணிக நிறுவனங்கள் ஐ டி, ஐ பி எஸ், பி பி ஓ கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறும் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 43 பிபி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாவிட்டால், அது தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

877786 19552 , 99526 39441 , 97905 66759 , 99526 75234 , 98409 638338

Updated On: 17 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது