/* */

சங்கரா சமுதாய கல்லூரியில் பயின்ற 56 நபர்களுக்கு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் சங்கரா சமுதாய கல்லூரியில் பயின்ற 56 நபர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி பட்டம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சங்கரா சமுதாய கல்லூரியில் பயின்ற 56 நபர்களுக்கு பட்டமளிப்பு விழா
X

சங்கரா சமுதாய கல்லூரியில் தொழில் கல்வி பயின்ற 56 நபர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒரு அங்கமான சமுதாயக் கல்லூரியில் இலவச தொழிற் கல்வியை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் கிளை அமைப்பான சங்கரா சமுதாயக் கல்லூரி 2010 இல் துவங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏழை எளியோர் மற்றும் இடை நிற்றல் கண்ட மாணவர்கள் , வாழ்வாதாரம் மேம்பட வேண்டி பயிற்சிக்கு தயாராகும் பெண்களை கருத்தில் கொண்டு இவர்களுக்கென தற்போதைய நடைமுறை தொழில் பயிற்சிகளை துவங்க விருப்பமுள்ள கல்லூரிகள் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டது.

இதனை சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குழுமம் முன்னெடுக்க முடிவு செய்து நிர்வாக அனுமதியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதனை செயல்படுத்த துவங்கியதாக கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

மேலும் தொழில் பயிற்சியில் , கணினியில் வடிவமைக்கும் பயிற்சி, தையற்பயிற்சி, கணினி பழுது நீக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் எவ்வித கட்டணமின்றி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் இந்த வகுப்புகள் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர்.

இதில் கணினி பயிற்சியை 50 நபர்களும் கணினி பழுது நீக்கும் ஹார்டுவேர் பயிற்சியை 6 நபர்களும் என மொத்தம் 56 நபர்கள் கடந்த ஆறு மாதமாக பயின்று வந்தனர். இவர்களுக்கு கடந்த மாதம் தேர்வு முடிந்து பயிற்சி பெற்ற 56 நபர்களும் பல்வேறு தர பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.

இப்பயிற்சியை முடித்த 56 பேருக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. தையல் ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார். சமுதாயக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இ.மணிகண்டன் வரவேற்று பேசினார்.

பயிற்சியை முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் பட்டங்களை வழங்கி பேசுகையில், எந்த தொழில் முனைவோரும் உடனடியாக பெரிய அளவில் வளர்ச்சியடைந்து விட முடியாது. பிரச்சினைகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து விடா முயற்சிகள் செய்தால் மட்டுமே எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும்.

மீன் வாங்கித் தருவதை விட மீனைப் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்று ஒரு பழமொழி உள்ளது.கல்லூரி நிர்வாகம் மீனைப் பிடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறது . இதனைப் பயன்படுத்தி வாழ்வில் பல சாதனைகளை ஏற்ற வேண்டும் என பட்டம் பெற்றவர்களிடையே பேசினார்.

Updated On: 5 Dec 2022 11:37 AM GMT

Related News