/* */

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள்
X

பல லட்சம் மதிப்பிலான தங்க நகை உள்ள வாகனத்தைச் சுற்றிலும் காவல்துறையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் கடந்த இருதினங்களுக்கு முன்பே அமுலுக்கு வந்தது

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகளும் 12 நிலைக்குழு வாகனங்கள் , நான்கு காணொளி குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படைகள் அனைத்தும் தங்கள் பணிகளை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவை இனறி பணங்களை எடுத்து செல்வது மற்றும் பொருட்களை எடுத்து செல்வது தவறான செயல் எனவும் இதனைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் நகை சப்ளை செய்யும் வாகனம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதனை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அவ்வாகனத்தில் சென்னையின் பிரபல நகைக்கடை நிறுவனத்தின் கிளைகளுக்கு நகைகள் எடுத்து செல்வதாகவும் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகும் தெரிவித்த நிலையில் , அதில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் குழு அவ்வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து அங்கு ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து போதிய ஆவணங்களுடன் விரைவாக வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதே போல் வாலாஜாபாத் பகுதியில் மற்றொரு நகைக்கடை வாகனமும் இதே நிலையில் சிக்கி உள்ளது அதனையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டது முதல் மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் வாகனங்கள் மற்றும் இது போன்ற வாகனங்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் அதனை அலட்சியமாக செயல்பட்டதால் தற்போது ஆவணங்கள் இருந்தும் இது போன்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

Updated On: 18 March 2024 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...