/* */

சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

காஞ்சிபுரம் அடுத்த சீயமங்கலம் பகுதியில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்

HIGHLIGHTS

சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்
X

காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன். இவரது மனைவி சரிதா, மகன் ராகுல், மகள் விஷாலி ஆகிய மூவரும் 14ஆம் நாள் துக்கவிழாவிற்கு உறவினர் வீட்டிற்கு நேற்று செய்யாறு சென்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் சரவணன் உடன் அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென வீட்டில் தீப்பிடித்ததால் இருவரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

குறுகிய அறை என்பதால் அதிலிருந்து சிலிண்டர் தீ விபத்தில் வெடித்து சிதறி மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்த உறவினர்களால் ஏதும் செய்ய இயலாத நிலையில் வெங்கடேசன் உடல் கருகி உட்கார்ந்த நிலையிலே இறந்தார்.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் வாலாஜாபாத் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

உடல் கருகி இறந்த நிலையில் இருந்த வெங்கடேசனை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நண்பன் சரவணன் தூக்கி வீசப்பட்டதால் 60% தீக்காயத்துடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீக்காய அவசர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

500 சதுர அடி கூட இல்லாத இடத்தில் கட்டில் பீரோ மற்றும் மூன்று சிலிண்டர்கள் இருந்த நிலையில் ஒரு சிலிண்டர் மட்டுமே வெடித்து இருந்தது. மேலும் இரண்டு சிலிண்டர்களை தீயணைப்புத்துறை பாதுகாப்பாக தீ விபத்து ஏற்படாத வகையில் அதனை பாதுகாத்தனர்.

அனைத்து சிலிண்டர்களும் வெடித்து இருந்தால் அருகில் உள்ள வீடுகளின் நிலை நள்ளிரவில் என்ன ஆகி இருக்கும் என்று கூற இயலாத சூழ்நிலை உள்ளது.

அந்த இடத்தில் அக்குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வசித்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதும், மூன்று சிலிண்டர்கள் வீட்டில் உள்ள வைக்க காரணம் என்ன எனவும் தெரியாமல் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் குழம்பி வருகின்றனர்.

உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்த வெங்கடேசன் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Updated On: 2 April 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை