/* */

காஞ்சிபுரம் : பிரபல தனியார் ஹோட்டலுக்கு சுகாதார தர நிர்ணய சான்று

காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு முதல்தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பிரபல தனியார் ஹோட்டலுக்கு சுகாதார தர நிர்ணய சான்று
X

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள், இனிப்பகம், திருக்கோயில் மடபள்ளி உள்ளிட்டவைகளில் சமையல் கூடங்களில் சுகாதார முறை, பணியில் உள்ளோர் பயிற்சி பெறுதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் தர நிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை உணவுக் கட்டுப்பாட்டு துறையிடம் 23 ஆயிரத்து 418 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் FFSAI சான்றிதழை 8806 பேர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தலைமையிடமாகக் கொண்டு மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரமனாஸ் உயர்தர சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இவ்உணவகத்தில் உணவுக் கூடங்கள், சமையல்கூடங்கள், பயிற்சி பெற்ற உணவு பரிமாறுபவர்கள் உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து பல்வேறு கட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வில் 106 மதிப்பெண்கள் பெற்று முதல் தர சுகாதார மதிப்பீட்டு தர சான்றிதழை பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழை இன்று காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா. ஸ்ரீ ரமணாஸ் உரிமையாளர் குருவிடம் அளித்தார். இதேபோல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 திருக்கோயில் மடப்பள்ளி களுக்கும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு