/* */

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்தி, துவக்கி வைத்த கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்தி, துவக்கி வைத்த கலெக்டர் ஆர்த்தி
X

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.







காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் குறித்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை அதிக அளவில் விழிப்புணர்வு செய்யும் வகையில் நகர கிராமங்கள் தோறும் வாகனம் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று இவ்வாகனத்தினை கலெக்டர் ஆர்த்தி தொடங்கிவைத்தார்.

இவ்வாகனத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள், சீம்பால் இன் நன்மைகள் ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் உள்ளிட்டவை குறித்த விளம்பர பதாகைகள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சற்குணம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

Updated On: 13 Aug 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு