/* */

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இணைந்து வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
X

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி வரவேற்புரை ஆற்றினார். முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்டங்கள் பெற தேசிய அடையாள அட்டை பெற வேண்டும் தற்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் தேசிய அடையாளத்தை பதிவு செய்திடும் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூரிலும், இரண்டாவது செவ்வாய்கிழமை காஞ்சிபுரத்திலும், மூன்றாவது செவ்வாய்க்கிழமை உத்திரமேரிலும் நடைபெற்று வருகிறது.

இது போன்ற முகாம்களில் இதுவரை 5121 தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரவர் மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்படும் சலுகைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் .

தமிழக முதல்வரே மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நிர்வகித்து வருவதால் அதிக அளவில் முகாம்கள் நல திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது என்றும், இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் தவறாது பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ப பணிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். வேலை வாய்ப்பு முகாமில் துவக்க நிகழ்ச்சியின் போது இரு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய இணை இயக்குனர் அருணகிரி பேசுகையில் , தமிழ்நாடு அரசு பணி தேர்வாளர் மையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் , படித்த பட்டதாரிகள் போட்டித் தேர்வில் கலந்துகொள்ள பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சியினை பயன்படுத்திக் கொண்டு அரசு பணிகளை எளிதாக பெறலாம் எனவும் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் சங்கீதா , ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஜோ, பொது மேலாளர் மோகனவேல் தொழிற்சாலை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்