/* */

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்: ஊழியர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்க ஆண்கள் பல்வேறு காரணங்களை கூறுவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்:  ஊழியர்கள் குற்றச்சாட்டு
X

தடுப்பூசி முகாமில் காத்திருக்கும் ஊழியர்கள்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 24மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் தடுப்பூசியில் பொதுமக்கள் குறைந்தளவே பங்கேற்பதால் சனிக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இதுவரை 93 சதவீதம் பேர் முதல் தவணை 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 இடங்களில் 7 மணி முதலே துவங்கியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்‌வு செய்து, தடுப்பூசி செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆண் பெண் இருபாலரும் 98 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். கிராமங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊழியர்கள் ஊசி போட அழைக்கும் போது பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கின்றனர்.

இதற்காக வாரத்தில் இருமுறை அவர்களுக்கு அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டும் முகாம் நடைபெறும் நாட்களில் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிப்பதால் 100 சதவீத இலக்கை எட்டுவதில் பெரும் சிரமம் ஏற்படுவது மட்டுமில்லாமல் மன உளைச்சலும் அதிகரிக்கிறது என ஊழியர்கள் கடும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றது.

தங்களை மட்டுமில்லாமல் குடும்பத்தினர் உறவினர்களை காக்கவாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் ஆண்களே! என கெஞ்சும் நிலையில் ஊழியர்கள் உள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Updated On: 30 Oct 2021 5:20 AM GMT

Related News