/* */

'11-ல் ஏதாவது 1' எடுத்துக்கிட்டு ஓட்டு போட வாங்க :கலெக்டர்

11 அரசு ஆவணங்களில் ஏதேனும் 1 அடையாளமாக எடுத்துகிட்டு ஓட்டு போட கட்டாயம் வாங்க என கலெக்டர் அழைப்பு

HIGHLIGHTS

11-ல் ஏதாவது 1 எடுத்துக்கிட்டு   ஓட்டு போட வாங்க :கலெக்டர்
X

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021,இம்மாதம் 6ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அன்று, வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களின் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை ( PAN Card ), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு ( Passport ), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால்/வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுள் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் புகைப்படம் பொருந்தாததால் வாக்காளர் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத போது, மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளித்து, தவறாது தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டு கொண்டுள்ளார்.

Updated On: 31 March 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...