/* */

நான்காவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.

உள்ளாட்சி தினம் என கூறிவிட்டு உள்ளாட்சி கோரிக்கைக்கு மதிப்பில்லை என நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

நான்காவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.
X

உள்ளாட்சி தினத்தை ஒட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்  கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தை நான்காவது முறையாக புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கும் கிராம மக்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக் குழுவினர் கோரிக்கை.

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்து சுற்று வட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விலை நிலங்கள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி,என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 464 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற ஆறு கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

இருப்பினும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி உள்ளிட்ட மூன்று நாட்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களை கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மூன்று முறை கிராமசபை கூட்டம் நடைபெறாத காரணத்தால் இன்று ஏகனாபுரம் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி இன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாக புறக்கணிப்பு செய்தனர்.

ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழு கதிரேசன்,

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பு வரும் வரை கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Updated On: 1 Nov 2023 2:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?