/* */

அட்டனன்ஸ் போட வராதீங்க, மனு குறித்த நிலை தெரிந்து கூட்டத்திற்கு வாங்க :ஆட்சியர் ஆர்த்தி

பொதுமக்கள் மனுக்களின் நிலை, அதன் விளக்கங்கள் தெரிந்து கொண்டு கூட்டத்தில் அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

HIGHLIGHTS

அட்டனன்ஸ் போட வராதீங்க, மனு குறித்த நிலை தெரிந்து கூட்டத்திற்கு வாங்க :ஆட்சியர் ஆர்த்தி
X

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதம்தோறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகம் கூட்டரங்கில் நடைபெறுவது வழக்கம்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பிற துறைகள் பிரச்சினைகளையும் இதில் மனுக்களாக அளித்தும் , நேரில் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று விவசாய நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. வேளாண்மை துறை சார்பாக இணை இயக்குனர் தற்போதைய மழை மற்றும் விவசாய சார்ந்த அறிவுரைகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த கூட்டங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் நிலைகள் குறித்து வேளாண் துறை அலுவலர்கள் ஒவ்வொன்றாக விளக்கம் அளித்து வந்தனர்.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மனுநிலை குறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறினார். அந்த அலுவலகம் சார்பாக வந்த அலுவலருக்கு மனு குறித்த நிலையோ மனுவின் விவரம் தெரியமால் பதில் கூறாமல் நிலையாக நின்றதை கண்ட ஆட்சியருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

உடனடியாக கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் நிலை அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை கூட தெரிந்திருக்காமல் கூட்டத்திற்கு வருகைக்காக இனி ஒரு அலுவலரும் வரக் கூடாது எனவும், இது போன்ற நிகழ்வு கூட்டம் இனி வருங்காலத்தில் நடைபெறக் கூடாது என அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவரின் மனோ நிலை குறித்து உடனடியாக அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அவருக்கு உரிய பதில் அளிக்கவும் அறிவுறுத்தினார்.

ஆட்சியரின் கண்டிப்பை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியும் , இதுபோன்ற கண்டிப்பை சற்றும் எதிர்பாராமல் அலுவலர்கள் அதிர்ச்சி கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது