/* */

ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்: அசத்தும் காஞ்சிபுரம் டிஐஜி குழுவினர்!

ஊரடங்கால் தவிக்கும் சாலையோர குடும்பங்களுக்கு உணவு பொருட்களை காஞ்சி காவல் துணைத்தலைவர் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்:  அசத்தும் காஞ்சிபுரம் டிஐஜி குழுவினர்!
X
டி.ஐ.ஜி. குழுவினரால், சாலையோர வாசிகளுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளற்ற இருவார ஊரடங்கு அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வார ஊரடங்கு என தொடர்ச்சியாக ஊரடங்கால் வருமானம் இன்றி பல குடும்பங்கள் அல்லல்பட்டு வருகிறது.

இவர்ளுக்காக பல தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் தங்களால் இயன்ற உதவிகளையும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவரின் குழுவினர் சப்தமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறுமையில் வாடும் சாலையோர குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், அவர்களது குழந்தைகளுக்கு பிஸ்கட் , விளையாட்டு பொருட்கள் எனவும் வழங்கி வருகிறது.

இதேபோல் சாலையோரம் தங்கள் குடும்ப ஆதரவின்றி வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கு உணவுகளை எந்தவித விளம்பரங்களும் இன்றி இக்குழுவினர் வழங்கிவரும் செயலினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவர்கள் வழங்கிவரும் நிவாரண பொருட்கள் குறித்த புகைப்படங்கள் , வீடியோக்களை கூட வெளியிட இக்குழு ஆர்வம் காட்டுவதில்லை . கடின முயற்சிக்குப் பிறகு இந்த வீடியோக்கள் தற்போது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்கொடை அளிப்பது ஒரு கைக்கு மற்றொரு கையை தெரியக்கூடாது என கூறும் நிலையில் இவர்கள் அளிக்கும் நன்கொடைகளை கூட கூற மறுத்து வருகின்றது. இது பெரிதும் பாராட்டுக்குரிய செயலாக உள்ளது

Updated On: 30 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...