/* */

ஆசிரியர்களுக்கு மாற்று என்பது கிடையாது: இளம்பகவத் ஐஏஎஸ்

Elam Bhagavath IAS-விஞ்ஞான வளர்ச்சிகள் வந்தாலும் ஆசிரியர்களுக்கு மாற்றாக எதுவும் இல்லை என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் கூறினார்

HIGHLIGHTS

ஆசிரியர்களுக்கு மாற்று என்பது கிடையாது: இளம்பகவத் ஐஏஎஸ்
X

இல்லம் தேடி கல்வி திட்ட விழாவில் கலந்து கொண்ட இளம் பகவத் 

Elam Bhagavath IAS-தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி எனும் திட்டம் 13 மாவட்டங்களில் செயல்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் இன்று பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் காலை துவங்கியது.

இதன் நிறைவு விழாவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத் ஐஏஎஸ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுடன் உரையாடினார். பயிற்சியில் கற்றவர்கள் சிறப்பு அதிகாரி முன் செயல் வடிவில் செய்து காட்டினார்.

இதன்பின் பயிற்சியாளர்களிடம் உரையாடுகையில் , கடந்த 18 மாத காலத்திற்கு பின் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்பதால் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இனிய உறவுகள் வலுப்படும் . இதற்கு முன் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு இலகுவான முறையில் கல்வி கற்க வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பின் செய்தியாளரிடம் பேசுகையில் , கடந்த 18 மாத காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியை கொண்டு மாணவர்கள் கல்வி கற்றாலும் வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியரிடமிருந்து செயல் வடிவில் கல்வி கற்பது சாலச் சிறந்தது. ஆசிரியருக்கு மாற்று ஒரு போதும் வேறு எதுவும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

தற்போது மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இவர்களைக் கொண்டு ஒன்றிய அளவில் பயிற்சி வழங்கப்பட்டு தன்னார்வலர் ஆசிரியர்களுக்கும் இணைப்பான உறவை கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துவோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Feb 2024 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்