bhringraj in tamil-மார்புச் சளியா..? கவலைய விடுங்க..! கரிசலாங்கண்ணி இருக்கு..!

bhringraj in tamil-கரிசலாங்கண்ணி கீரையாகவும் சமைத்து உண்ணலாம்.இதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. அவைகளை பார்ப்போம் வாங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
bhringraj in tamil-மார்புச் சளியா..? கவலைய விடுங்க..! கரிசலாங்கண்ணி இருக்கு..!
X

bhringraj in tamil-கரிசலாங்கண்ணி (கோப்பு படம்)

bhringraj in tamil-கரிசலாங்கண்ணி கற்பக மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்,இராமலிங்க வள்ளலார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.


கரிசலாங்கண்ணி கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்த ஒரு தாவர வகையாகும். இலைகள், எதிரெதிராக அடுக்காக அமைந்தவை. அகலத்தில் குறுகி நீண்டவையாக இருக்கும். சொரசொரப்பான தாவரம். அதில் பூக்கும் பூக்கள் சிறியதாக வெண்மை நிறத்தில் இருக்கும்.


தோற்றத்தில் சூரியகாந்தி மலர் போல சிறியதாக இருக்கும். கிளைகளின் நுனியில் பூக்கும். வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. இதன் முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

bhringraj in tamil


மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து பசைபோல அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி , ஒரு டம்ளர் மோரில் கலந்து, குடிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 7 நாட்கள் காலை, மாலை வேளைகளில் குடித்து வரவேண்டும். அந்த 7 நாட்களும் உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியம் இருப்பது அவசியம். மஞ்சள் காமாலை குணமாகும்.


சளி, கோளை

மார்பில் கட்டிய கோளை இளகி வெளியேற கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவி, பசைபோல அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு அளவு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதை காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி அதை ஒரு தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும். மார்பில் கட்டிய கோளை வெளியேறும்.

bhringraj in tamil

கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணித் தைலம்

கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலம் தேய்த்து தலைகுளித்து வந்தால் தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிடலாம்.


கரிசலாங்கண்ணி எண்ணெய்

கரிசலாங்கண்ணி எண்ணெய் தலை முடி வளர பிரபலமானதாக்கும். பல நிறுவனங்கள் கரிசலாங்கண்ணி சேர்த்து பிருங்கராஜ் எண்ணெய் என்ற பெயர்களில் விற்பனை செய்வதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். முடி வளர சிறந்த எண்ணெயாக கருதப்படுகிறது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி

பெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசலாங்கண்ணியின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம், மஞ்சள் கரிசலாங்கண்ணி . அதிகமாக இயற்கையாக வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

Updated On: 2 Feb 2023 7:24 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 2. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 5. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 6. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 7. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 8. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 9. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 10. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!