/* */

காஞ்சிபுரம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 75 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து தக்க அறிவுரை வழங்கினர் .

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 75 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
X

காஞ்சிபுரம் பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 75 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

தமிழகம் முழுவதுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுவதால் இதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்தது.

தடை செய்தப் பின்னரும் மறைமுகமாக பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு எச்சரித்தும் பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்தாமல் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு கடை உரிமையாளரிடம் பிளாஸ்டிக் பைகளை பெற்று வருவதால் இதன் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.

மேலும் பிளாஸ்டிக் தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலைக் குழுவினர் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் மாநகராட்சி சார்பில் மூலம் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி பள்ளி மாணவர்கள் கொண்டு விழிப்புணர்வு பேரணியும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையிலும் இதனை கட்டுப்படுத்த பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின்படியும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரிலும் மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார்,முகமது இக்பால்,லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி, மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள்,மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து சுமார் 11,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.


பின்னர்,கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் காய்கறி சந்தை பூ மார்க்கெட் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என்பதும் , அபராதம் மட்டும் கடை உரிமையாளரை மாற்றும் என்பதை கைவிட்டு விட்டு , பொதுமக்கள் தாங்களாகவே வந்து தங்களின் சந்ததியினருக்கு சுகாதாரத்தை 100% உறுதிபடுத்தும் வகையில் பிளாஸ்டிக் தவிர்ப்பது நல்லது என்பதை உணர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

Updated On: 9 Oct 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?