/* */

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த 31 நாய்கள் மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்பு

காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளதாக எம்எல்ஏ உள்பட பலர் தொடர் புகார் கூறி வந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த 31 நாய்கள் மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்பு
X

காமாட்சி அம்மன் கோயில் அருகே காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களால் சாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் நாய்களால் பெரும் மச்சம் அடைந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க குறை தீர் மையம் மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்து தொடங்கியது.

துவக்க விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதன் செயல்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் தனது தொலைபேசியில் இருந்து கட்டணமில்லா தொலைபேசி எண் புகார் தெரிவிக்க அழைத்து , அங்குள்ள ஊழியர் குறைகளை கேட்டபோது காஞ்சிபுரத்தில் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சமணியதாகும் அதனை விரைந்து பிடித்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என குறைகளாக பதிவு செய்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் மறைமலைநகர் பேரூராட்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட வாகனம் மற்றும் 4 ஊழியர்கள் மூலம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 31 நாய்களை பிடித்து வாகனத்தில் ஏற்றி திருக்காளிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் வைத்துள்ளனர்.

நாளை கால்நடைத்துறை மருத்துவர் இவைகளுக்கு கருத்தடை மற்றும் ஊசி செலுத்தி அதன் பின் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு காஞ்சிபுரத்தில் இப்பணி தொடரும்‌ என கூறப்படுகிறது.

Updated On: 22 Sep 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து