/* */

காஞ்சிபுரம் தனியார் நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்

முறைகேடான பண பரிவர்த்தனை மூலம் பொது மக்களிடம் முதலீடு பெற்றுள்ளதாக கோரி வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தனியார் நிறுவனம் மீது  பொருளாதார குற்றப்பிரிவில் புகார்
X

 காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் வழக்கறிஞர் திலக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், காஞ்சிபுரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனம், அதன் பெயரிலும், அதன் கிளை நிறுவனங்களில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து முறையான ஆவணங்கள் ஏதுமின்றி பல கோடி ரூபாய் பணத்தை முறைகேடான முறையில் வசூலித்து வருகின்றனர்.

ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதா மாதம் அதற்கு 5 % - 10% வரை வட்டி தருவதாக கூறி சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் மாதந்தோறும் பணம் வசூலித்து வருவதாகவும், 12 மாதங்கள் நிறைவு பெற்ற பின் முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் என கூறி முறை கேடாக பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி வசூலித்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் சார்பாகவும் , அதன் கீழ் பல்வேறு குழு அமைப்பு‌ மூலமாகவும், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் மக்களிடமிருந்து வசூலித்து உள்ளனர்.

இந்த தனியார் நிறுவனத்தின் நோக்கம் பொதுமக்களையும் அவர்களின் பணத்தையும் ஏமாற்றுவது ஆகும். இந்த சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் பொதுமக்கள் பலரையும் ஏமாற்றி முறைகேடான முறையில் பண முதலீடு செய்ய வைத்து, பொதுமக்களையும் அரசையும் ஏமாற்றும் நோக்கில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவன இயக்குனர்கள் மீதும் , அதன் குழு தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வங்கி கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் மேற்படி நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து வங்கிக் கணக்குகளை தணிக்கை செய்து நிறுவனத்தை தடை செய்து பொதுமக்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை