/* */

பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டு சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்: விவசாயிகளுக்கு  ஆட்சியர் அறிவுரை
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட அறிவிப்பில் , தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் II சம்பா பருவத்திலும், நெல் III, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் நவரை பருவத்திலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2023 நவம்பர் மாதம் 15 – ம் தேதிக்குள்ளும், நவரை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் (நெல் மற்றும் நிலக்கடலை) பயிர்களை 2024 ஜனவரி மாதம் 31 – ம் தேதிக்குள்ளும் கரும்பு 2023 பயிரினை 2024 மார்ச் 30 – ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக (நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 512.25, நிலக்கடலைக்கு ரூ. 458, கரும்பு பயிருக்கு ரூ. 2900) செலுத்தினால் போதுமானது.

எனவே, சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) / தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” (www.pmfby.gov.in) நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ- அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் விவசாய பரப்பானது 75 சதவீத்திற்கும் மேல் விதைப்பு செய்ய இயலாமை / விதைப்பு பொய்த்தல் மூலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பின் திட்ட விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டுத் தொகையாக பெறலாம் என தெரிவித்துள்ளார்

Updated On: 9 Nov 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்