/* */

ரூ55 லட்சம் மதிப்பில் நூலகம், ஆய்வகம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு

ஐயங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆய்வகம் மற்றும் நூலகத்திற்கான கட்டிட திறப்பு இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

ரூ55 லட்சம் மதிப்பில் நூலகம், ஆய்வகம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு
X

ரூபாய் 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வகம் மற்றும் நூலக கட்டிடத்தில் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐயங்கார் குளம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் ஆய்வகம் மற்றும் நூலகத்திற்கு என தனி கட்டிடம் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் ரூபாய் 55.17 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இக்கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தலைமை செயலகத்தில் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய கட்டிட வளாகத்தில் குத்து விளக்கேற்றி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடிகுமார், துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் குமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2022 5:30 AM GMT

Related News