/* */

காஞ்சிபுரம் நகருக்குள் கழிவு நீர் லாரியை தடுத்து பொதுமக்கள் போராட்டம்

காஞ்சிபுரம் நகருக்குள் கழிவு நீர் லாரி வருவதை தடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நகருக்குள் கழிவு நீர் லாரியை தடுத்து பொதுமக்கள் போராட்டம்
X

கழிவுநீர் லாரி செல்வதை தடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி  22வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவை நான்கு மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

இப்பணிக்காக 400 நிரந்தர பணியாளர்களும் , 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் இரண்டு சுழற்சி முறையில் பணியாற்றி சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகள் மற்றும் வீடுகள் தோறும் சென்று பொதுமக்கள் பிரித்தளிக்கும் குப்பைகளை சேகரித்து குப்பை லாரிகளில் ஊழியர்கள் ஏற்றி வருகிறார்கள்.

இதனை மாநகராட்சிக்கு சொந்தமான திருக்காளிமேடு பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே குப்பை லாரிகள் அப்பகுதியாக செல்ல பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருக்காளிமேடு கவரை தெரு பகுதி வழியாக லாரிகள் செல்வதால் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் செல்வதால் வாகன விபத்தும் , லாரிகளிலிருந்து கழிவுகள் சாலையில் கொட்டிக் கொண்டு செல்வதால் மீண்டும் சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி அப்பகுதி கேட்டினை அடைத்து மாமன்ற உறுப்பினரும் , துணை மேயருமான குமரகுருநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 28 வது வார்டு பகுதியாக செல்வதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாமன்ற உறுப்பினர் சந்துரு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் லாரிகள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே திருக்காளிமேடு பகுதியான ஹரிவந்த் நகர், மாமல்லன்நகர் வழியாக செல்ல அப்பகுதியில் உள்ள கால்வாயில் குழாய் பதித்து அதன் மேல் செல்ல கழிவுநீர் லாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நேற்று பணி நடக்கும் நிலையில் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது அதிகாரிகள் செல்ல வழி ஏற்படுத்துவதாக கூறி பணிகளை நிறைவு செய்த பின் இன்று காலை அவ்வழியாக கழிவுநீர் லாரி வந்துள்ளது.

இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்து தங்கள் பகுதி நகர் வழியாக செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாமன்ற உறுப்பினர், ஆணையர்‌, பொறியாளர் ஆகியோருக்கு கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்த போது அப்பகுதிக்கு உடனடியாக அதிகாரிகள் வருவார்கள் என தெரிவித்த நிலையில், இரண்டு மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த நிலையில் யாரும் வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது லாரியை சிறை பிடித்துக் கொள்ளுங்கள் அல்லது அந்த வழியை அடைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்ததை கேட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைக் கேட்ட கழிவுநீர் லாரி ஓட்டுனர்களும், இனி இந்த பகுதி வழியாக வாகனம் எடுத்து வர மாட்டோம் என உறுதி கூறியதால் கழிவு நீர் வாகனத்தை விடுவித்து அப்பகுதியில் மரங்களைப் போட்டு அப்பகுதி மக்கள் தடை செய்துவிட்டனர்.

கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் லாரிகளை பொதுமக்கள் தடுப்பதாகவும் , தங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இரு பக்கமும் அமைதி காக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக லாரி ஊழியர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சனைக்கு முறையாக தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 26 Nov 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு