/* */

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு
X

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையின் போது வருகை புரிந்த அருந்ததியர் கிறிஸ்தவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் இரு தரப்பு கிறிஸ்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு தரப்பு கிறிஸ்தவர்களான தலித் கிறிஸ்துவர்கள் மீது பல்வேறு வகையில் தீண்டாமை சாதிய அடக்குமுறையை இக்கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள மற்றொரு தரப்பு கிறிஸ்தவர்கள் ஏவி வருகின்றதாகவும்,குறிப்பாக மாதா கோவிலில் தனியாக அமர வைப்பது, கோவிலுக்கு செல்லும் போது செருப்பு அணிய கூடாது,கோவிலில் எங்கள் கை கால்கள் மேல் பட கூடாது எனப் பல்வேறு தீண்டாமையை கடந்த பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றதாக தலித் கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இதை எதிர்த்து பல வகையான போராட்டங்களை நடத்தியும்,எங்களை கோவிலில் நுழைய விடாமல் தடுத்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததின் பேரில் மாவட்ட வருவாய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறை, காவல்துறை மற்றும் நாயுடுக்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தள்ளதாகவும், அதில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டி வழக்கு தொடர்ந்து,உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திட உத்தரவிட்ட நிலையில் ஒரு சில சட்ட பாதுகாப்பு கிடைத்த நிலையில் இன்று வரை தனி சுடுகாடு, தனி கோவில், தனி திருவிழா என தான் தொடர்கின்றதாக ஒரு தரப்பு கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறையிடமும் எங்கள் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள நாயுடு கிறிஸ்தவர்கள் தவறான தகவல்கள், கடிதங்களை என பரப்பி வருகின்றதாகவும்,

மேலும் எங்கள் பகுதியில் நிலவும் தீண்டாமை சாதிய பாகுபாட்டை போக்கவும் தொடர்ந்து நாங்கள் பயமின்றி அச்சமின்றி சராசரி வாழ்க்கையை வாழ்ந்திட விசாரணை செய்து சாதியவாதிகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தலித் மக்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்துவர்கள் இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணியிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும்,ஆகையால் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகைப்புரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தேர்தல் முடிந்த பிறகு சுமூக முடிவெடுக்கப்படும் என்று அளித்த உத்தரவாதத்தின் பேரில் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்களது வாக்காளர் அடையாளத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஒன்று கூடி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து,வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.

Updated On: 18 March 2024 12:04 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!