/* */

மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள்

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் சார்பில் ஓரிக்கை பாலாறு அருகே குற்ற செயல்களை கண்காணிக்கவும் தடுக்கும் நோக்கில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.

HIGHLIGHTS

மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள்
X

ஓரிக்கை பாலாறு அருகே குற்ற சம்பவங்கள் கண்காணிக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா.

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் உள்ளது. ஆற்றுப்படுகையில் உள்ள மணல்களை எடுக்க தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதை மீறி மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனை மீறும் நபர்கள் மீது குற்ற செயல் நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து மூன்று முறை இச்சம்பவத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில் பாலாறு ஆற்றுப்படுகைகளில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் தொடர்ச்சியாக மர்மன் அவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்கும் பொருட்டு பல ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் குற்ற சம்பவங்கள் மற்றும் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தி வருகின்றனர்.

காவல்துறைக்கு குற்ற சம்பவங்களுக்கு பெரிதும் மூன்றாவது கண்ணாக சிசிடிவி இருப்பதால் இதனை குடியிருப்பு பகுதிகளிலும் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பிலும், தொழிற்சாலைகளின் நலநிதியிலும் இருந்தும் அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டு இதற்கான செயலியின் மூலம் கைப்பேசியிலும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிக்கை பாலாறு பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்கவும், பகுதியாக செல்லும் வாகனங்களினை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்கள் செய்துவிட்டு தப்பிக்கும் நபர்களை உடனடியாக கண்காணிக்கும் இப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் பாலாற்று படுகையில் இருந்து அருகில் உள்ள புதிய குடியிருப்புகள் கட்டுமான பணிக்கு சைக்கிள் மற்றும் பழைய இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி மணல் மூட்டைகளை கொண்டு செல்வதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்து அதை கண்காணித்து காவல்துறை கைது செய்வதால், இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் அதனை சேதப்படுத்தி பயன் அற்றவையாக ஆக்கியுள்ளனர்.

மேலும் அவர்கள் மணல் கொண்டு செல்லும் பாதைகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி எந்தவித தடையும் இன்றி மணல் கடத்தி புதிய கட்டுமான வீடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.

சார்பு ஆய்வாளர் இருசக்கர வாகனம் திருட்டு

இந்நிலையில் காஞ்சிபுரம் தற்காலிக காய்கறி சந்தையில் காவல் சார்பு ஆய்வாளரின் அரசு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வருகையில் அவ்வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தியில் கேமராக்களில் பதிவுகள் மேற்கொள்ளாத வரை கேமராக்களினை சேதப்படுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மணல் கொள்ளையர்கள் இலகு ரக இருசக்கர வாகனத்தை ரூபாய் இரண்டாயிரத்தில் இருந்து ஐயாயிரம் வரை கொடுத்து உபயோகத்தில் இல்லாத வாகனத்தை வாங்கி இது போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்துவதும், இல்லையேல் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை மணல் கடத்தலுக்காக திருடப்பட்டு வருவதும் காஞ்சிபுரத்தில் சர்வ சாதாரணமாக உள்ளது.

காவலர் வாகனம் என்ன ? யார் வாகனம் இருந்தாலும் நாங்கள் திருடுவோம் எங்களை கண்காணிக்கவும் திருட்டை தடுக்கவோ யாராலும் இயலாது என்று சவால் விட்டு கூறும் அளவிலேயே இச்சம்பவங்கள் உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jan 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்