/* */

காஞ்சிபுரத்தில் நவம்பரில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு : அகில இந்திய தலைவர் டி.பி.சேகர்

காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதம் வடமாநில ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடை பெறுகிறது என்று அகில இந்திய தலைவர் டி.பி.சேகர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நவம்பரில்  ஐயப்ப பக்தர்கள் மாநாடு : அகில இந்திய தலைவர் டி.பி.சேகர்
X

காஞ்சிபுரம் காமாஞ்சி அம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சமாஜத்தின் அகில இந்திய தலைவர் டி.பி.சேகர் பேட்டி அளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஐயப்ப சேவா சமாஜத்தின் அகில இந்திய தலைவர் டி.பி.சேகர் தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்தளிடம் சந்தித்தார்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ அமைப்பு இந்தியாவில் 18 மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து சமுதாய சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தவும் சபரிமலை சந்நிதானத்தின் மகத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாக இருந்து வருகிறது.

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி சத்திரத்தில் வடமாநில ஐயப்ப பக்தர்களுக்கான ஒருநாள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வட மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். பயிற்சி முடித்த இவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்று ஐயப்பனுக்கு பூஜை செய்யும் விதங்கள்,மகத்துவங்கள் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படும்.

இந்த மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இம்மாநாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் ,காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் மற்றும் காஞ்சிபுரம் நகர முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

நிறைவு நாளன்று காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றி ஆசி வழங்கிடவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமாஜம் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் தலைவர் காஞ்சி ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் என்றார்.

பேட்டியின்போது வட மாநிலம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான ஐயப்ப சேவா சமாஜத்தின் அமைப்புச் செயலாளர் துரை சங்கர் ,காஞ்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலரும் உடன் இருந்தனர்..

பட விளக்கம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்ட ஐயப்ப சேவா சமாஜத்தின் அகில இந்திய தலைவர் டி.பி.சேகர்.

Updated On: 17 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  2. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  4. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  7. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  10. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...