/* */

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை  விழா கொண்டாட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக இந்தியா முழுவதும் கோயில்கள் மற்றும் வீடுகளில் நடைபெற்றுவருகிறது.

முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரிய நாள். அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி பூஜையைத் தொடங்க வேண்டும். நாம் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அவற்றின்மேல் சரஸ்வதி படத்தையோ சிலைகளை வைத்து வழிபடுகிறோம்.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் அன்னையை துர்கை வடிவிலும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி வடிவிலும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு.

நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

இந்த நவராத்தி தினங்களில் கோயில்‌நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் கோயில்களின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்‌ எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் கோயில்களில் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். இதேபோல் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சியம்மன் பல்வேறு அலங்காரத்தில் நவராத்தி மண்டபத்தில் எழுந்தருளி பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பல்வேறு பட்சணங்கள் வைத்து வழிபட்டு‌ இதில் கலந்து கொள்பவர்களுக்கு பிரசாதங்களாக வழங்குவர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் இன்று சரஸ்வதி , ஆயுதபூஜைகளுக்காக சுத்தம் செய்யப்பட்டு , தோரணம் , வாழை மரம் என அலங்கரிப்பு லஷ்மி , சரஸ்வதி படங்கள் வைக்கப்பட்டு பொரி, பழங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் தலைவர்கள்‌, மன்ற உறுப்பினர்கள், செயலர் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகள்‌சார்பில் அலுவலகங்கள்‌ மற்றும் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் துணைத்தலைவர் நித்யசுகுமார் தலைமையில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து ஊழியர்களுக்கு பூஜை பிரசாதங்கள் , இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மலர்கொடிகுமார் மற்றும் துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஊழியர்கள் என இணைந்து வாகனங்கள் , அலுவலக பொருட்களுக்கு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அலுவலக ஊழியர்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அனைத்து அரசு அலுவலங்களிலும் இன்றே சரஸ்வதி , ஆயூத பூஜைகளும் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் துணை தலைவர் நித்யா சுகுமார் தலைமையிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மலர்கொடிகுமார் தலைமையிலும் ஊழியர்கள்‌ ஆயுத பூஜை விழா கொண்டாடினர்.

Updated On: 3 Oct 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது