/* */

இந்து கடவுளை இழிவுபடுத்தியவர் மீது தாக்குதல்: காஞ்சிபுரம் பாஜக பிரமுகர்கள் கைது

காஞ்சிபுரத்தில் இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை தாக்கியதாக பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கைது செய்து செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இந்து கடவுளை இழிவுபடுத்தியவர் மீது தாக்குதல்: காஞ்சிபுரம் பாஜக பிரமுகர்கள் கைது
X

கடை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபடும் பாஜகவினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சங்குபாணி விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அரசு உத்தர விடக்கோரி தோப்புக்கரணம் போட்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கோவிலில் அருகே பூஜை பொருட்கள் விற்கும் பூபதி என்பவர், அத்தி வரதர் படத்தை காலனிக்குள் சொருகி பூவைத்துள்ளார். இதனைக் கண்ட நிர்வாகிகள் இது குறித்து கேட்டபோது முறையற்ற பதில் வந்ததால் கடையில் இருந்த பொருட்களை தள்ளி தாக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருதரப்பினரும் மீதும் சிவகாஞ்சி காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பாஜக பிரமுகர்கள் ஜெகதீசன் ஜீவானந்தம் , அதிசயம் குமார், சதீஷ், இந்துமுன்னணி சந்தோஷ் , தேவதாஸ் ஆகியோரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்து பாலுசெட்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றது.

Updated On: 5 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை