/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பகுதி சபை கூட்டம்: எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி பங்கேற்பு…

காஞ்சிபுரம் மாநகாரட்சியில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்தில் எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பகுதி சபை கூட்டம்: எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி பங்கேற்பு…
X

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் மேயர் மற்றும் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் நடத்தப்படுவது போல பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர பகுதி சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதன்படி, அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகாரட்சி பகுதிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது.

நகராட்சி மற்றும் நிர்வாக துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முதல் முறையாக மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் 9 ஆவது வார்டு பகுதியில் நகர பகுதி சபை கூட்டம் தனியார் திருமண மண்டபம் மற்றும் திருக்கோயிலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கிராம சபைகள் கூட்டங்கள் முறைப்படி நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களைப் போன்று பகுதி சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இது மிகவும் வரவேற்கத்தக்கது இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவித்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சி நடைபெறுவது போல காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மஞ்சள் நீர் கால்வாய் மேல் சாலை அமைத்து கூடுதல் சாலை வசதி ஏற்படுத்துவது, நந்தபேட்டை பகுதியில் 44 கோடி ரூபாய் செலவில் புதிய முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது போன்ற திட்டங்களை முதல்வர் அறிவித்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதங்கள் பார்க்காமல் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்ற ஒரே முதல்வர் நமது தமிழக முதல்வர் தான். மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கட்சி பாகுபாடின்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என எழிலரசன் எம்எல்ஏ பேசினார்.

மேலும், கூட்டத்தின்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்டது. கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், குமரேசன், மண்டி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 வார்டுகளிலும் 250 பகுதி சபை கூட்டங்கள் அந்தந்த மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பகுதி மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர் சார்பில் மேயரிடம் வழங்கப்படும் என்றும் பெறப்படும் கோரிக்கைகள் நிதி மற்றும் மக்களின் தேவை முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2022 10:33 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  5. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  6. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  8. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  10. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை