/* */

மக்கள் ஓட்டு போடவில்லை என்றால் திமுக கொள்கை மாறுவார்கள் - அன்புமணி..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் அன்புமணி ராமதாஸ்

HIGHLIGHTS

மக்கள் ஓட்டு போடவில்லை என்றால் திமுக கொள்கை மாறுவார்கள் - அன்புமணி..!
X

பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

திமுகவிற்கு ஓட்டு போடவில்லை என்று கொள்கையை மாற்றிக் கொள்வதா ? 40 ஆண்டுகளுக்கு மேலாக பாமக மதுவிலக்கு எனும் ஒரே கொள்கையுடன் போராடி வருகிறது என அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தில் பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாமக மாவட்ட தலைவர் மகேஷ் குமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பொது மக்களுக்கிடையே வாக்குகள் சேகரித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் எனவும் மாற்றத்தை காணவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதியிடம் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை விடுத்த போது , கடந்த 2016 தேர்தலில் திமுக மதுக்கடைகளை மூடுவோம் என கூறி வாக்குறுதி அளித்த போது திமுகவிற்கு வாக்களித்தீர்களா என அவர்களிடம் திருப்பிக் கேட்டார்.

மக்களுக்கு ஓட்டு போட்டால் மட்டும் தானா நல்லதை செய்வீர்கள்? தங்களுக்கு என்ற கொள்கை இல்லையா ? எனவும் , கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி மதுவிலக்கு என்ற ஒரே கொள்கையை முன்னிறுத்தி வருவதால் தான் தற்போது வரை எங்களை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர் ஆனாலும் எல்லா இழப்புக்களையும் சந்தித்து தற்போது வரை அதே கொள்கை பிடிப்புடன் எங்களது நிறுவனரும் தொண்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆகவே கொள்கை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து விதத்திலும் சிறந்தது என்பதால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் தமாக மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் , ஐஜேகே மாவட்ட தலைவர் அப்பு , பாஜக, பாமக , அமமுக மாவட்ட நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2024 5:00 PM GMT

Related News