/* */

மதுவிலக்கு குறித்து திமுக- அதிமுக விவாதத்திற்கு தயாரா? அன்புமணி சவால்

காஞ்சிபுரத்தில் பாமக மேயரனால் மதுகடைகள் அகற்றப்படும் என பாமக மேயர் முதல் கையெழுத்திடுவார்‌: அன்புமணி

HIGHLIGHTS

மதுவிலக்கு குறித்து திமுக- அதிமுக விவாதத்திற்கு தயாரா? அன்புமணி சவால்
X

பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அண்புமணி ராமதாஸ்.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வணிகர் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தி பொதுகூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஏரி மாவட்டம் என பெயர்பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என் தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகிறது. மதுவிலக்கு குறித்து திமுக- அதிமுக விவாதத்திற்கு தயாரா? காஞ்சிபுரம் மாநகராட்சி பாமக வெற்றி பெற்று மேயரானால், காஞ்சிபுரம் நகரில் எங்கும் டாஸ்மாக் இயங்க அனுமதி வழங்க மாட்டோம். இதற்கான தீர்மானம் கையெழுத்தை முதலில் மேற்கொள்வோம்.

தூய்மையான நகரை உருவாக்குவோம், நெரிசலை குறைக்க திட்டம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்தும் சிறப்பாக திட்டம் எங்களிடம் உள்ளது. வாக்கு விலைக்கு விற்கப்படும் நிலையில் பாமக வேட்பாளர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நேர்மையானவர்கள்‌. இவ்வாறு அவர் பேசினார்.

இப்பரப்புரை கூட்டத்தில், முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், சக்தி கமலம்பாள், உமாபதி என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2022 3:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...