/* */

புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்

Sri Varadaraja Perumal Temple -காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

HIGHLIGHTS

புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள்.

Sri Varadaraja Perumal Temple -புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் பக்தர்கள் மாதம் முழுவதும் விரதங்கள் மேற்கொண்டு நடை பயணமாக திருப்பதி சென்று பெருமாலை தரிப்பது தரிசிப்பதும் , சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு திருமஞ்சனம் , பூஜைகள் செய்வது வழக்கம்.

அவ்வகையில்புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் 3-வது சனிக்கு சனிக்கிழமை யான இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி பெருந்தேவி தாயார்,வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு சாமந்திப்பூ, ரோஜா பூ, தாமரைப்பூ, மலர் மாலைகள் அணிவித்து பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரம் மற்றும் வெளியூர்,வெளிமாநிலம், வெளிநாடு என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த தொடர்ந்து நீண்ட கியூ வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு பக்தியுடன் வணங்கி வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோயில் அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் , அழகிய சிங்கப்பெருமாள் கோயில் , விளக்கொளி பெருமாள் கோயில் , உலகளந்த பெருமாள் , பச்சை வண்ணர்‌, பவள வண்ணர் , பாண்டவ தூத பெருமாள் கோயில் என அனைத்து கோயிலும் பொதுமக்கள் திரளாக திரண்டு எம்பெருமானை வரிசையில் நின்று தரிசித்தனர்.

இதே போல் உத்திரமேரூர் அடுத்த மேல் வையாவூரில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் மலைக்கோயில் அதிகாலை சிறப்பு சாமி தரிசன மேற்கொள்ளும் வகையில் சிறப்பு மலர் அலங்காரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் கோயில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அருள் பாலித்தார்.

இதேபோல் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பஜனை சிறப்பு திருமஞ்சனத்துக்கு பின் எம்பெருமான் அலங்கரிக்கப்பட்டு புளியோதரை தயிர் சாதம் சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நெய்வேத்தியங்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி 3வது சனிக்கிழமையொட்டி பஜனை குழுவினரும் அந்தந்த திருக்கோயில்களில் பெருமாள் பக்தி பாடல்கள் பாடி மகிந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!