/* */

காஞ்சிபுரத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 77  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்
X

கீழம்பி‌ கிராம ஏரி நிரம்பி நீர் வெளியேறும் காட்சிகள்

தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முதல் மழை பெய்யத்துவங்கியது. நேற்று காலை 10 மணி முதல் 2 மணிவரை தொடர் மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் எழுபத்தி ஏழு ஏரிகள் முழு கொள்ளளவையும், 111 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவையும் , 66 ஏரிகள் 50 சதத்தையும் எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 12.80மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 27.6 மில்லி மீட்டரும், உத்திரமேரூரில் 35.6 மில்லி மீட்டரும், வாலாஜாபாத்தில் 12.6 மில்லி மீட்டரும், குன்றத்தூரில் 48.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாலாறு மற்றும் செய்யாறுகளில் தற்போது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 30 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?