/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 57 % இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

மாநகராட்சிக்கு 36 வார்டு மாமன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் 4510 வாக்காளர்கள் உள்ள நிலையில் 2597 பேர் வாக்களித்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 57 % இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்ட மாநகராட்சி ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான காலியான பதவி இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தியாகி நடுநிலைப்பள்ளியில் காலை 7:00 மணிக்கு 4 வாக்குப்பதிவு மையங்களில் துவங்கியது. இந்த இடத்தை ஒரு பதவிக்கு திமுக அதிமுக ( சுயேச்சை) , பாமக , அமமுக மற்றும் சுயேச்சைகள் என ஆறு பேர் போட்டியிட்டனர்.

இந்த வார்டு பகுதியில் 2,154 ஆண் வாக்காளர்களும், 2,356 பெண் வாக்காளர்களும் என 4,510 பேர் உள்ள நிலையில், இன்று 1,248 ஆண் வாக்காளர்களும், 1,349 பெண் வாக்காளர்களும் என 2,597 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது சராசரியாக 57 சதவீத வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் அறிஞர் அண்ணா அரங்கில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டது. இதேபோல் ஊரக உள்ளாட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் உள்ள 608 வாக்காளர்களில் 498 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 82 சதவீத வாக்குப்பதிவை தெரிவிக்கிறது.

Updated On: 9 July 2022 1:45 PM GMT

Related News