/* */

1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் வீட்டில் மறைத்து வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது
X

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டபோது

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களிடமிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர்.

அவர்களுக்கு உணவு சமைக்க அரிசி அதிக விலை கொடுத்து வாங்கும் இயலாத நிலையில் ரேஷன் அரிசியை கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு சாதகமாகி கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் அரிசியை வாங்கி சேமித்து வைத்து புரோக்கர்களிடம் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

அவ்வப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் வாகன சோதனைகள் மேற்கொண்டு பல ஆயிரம் டன் அரிசிகளை பறிமுதல் செய்து ஒப்படைத்து வருகின்றனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் காவல்துறையினர் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள பிலால்(37) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தலா 50 கிலோ எடையுள்ள 30 முட்டைகளாக மொத்தம் 1500 கிலோ அரிசி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்ததுடன் பிலாலையும் கைது செய்தனர்.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்தவர்களான மொய்தீன் அப்துல்காதர் (52), திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் பேசி என்னரேஷன் அரிசியை பயன்படுத்தி அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களும் இதனை வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Updated On: 22 May 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  5. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  6. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  7. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  9. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி
  10. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா