சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் வீட்டில் குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.

சென்னை ஆலந்தூர் மடுவின்கரையை சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் விஷ்வா(16), ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டிற்கு வந்த விஷ்வா படுக்கையறைக்கு சென்று நெடுநேரம் கதவு திறக்கவில்லை. இதை பார்த்த இவருடைய பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்த போது விஷ்வா மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விஷ்வா பள்ளி முடிந்து வரும் போது தன்னுடைய நண்பரிடம் நாளையிலிருந்து நான் பள்ளிக்கு வர மாட்டேன் என்று கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 18 May 2022 12:08 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 2. பொன்னேரி
  வயிற்றுப்போக்கு காரணத்தினால் 12 ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
 3. உசிலம்பட்டி
  காமராசர் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய பணியாளர் பலி
 4. விழுப்புரம்
  விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
 8. ஈரோடு
  சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
 9. நாமக்கல்
  கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில்...
 10. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...