Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
உளுந்தூர்பேட்டை அடுத்த பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

நிவாரணப் பொருட்களை வழங்கிய துணை கண்காணிப்பாளர் மணிமொழியன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் மணிமொழியன், புதிய தளிர் அறகட்டளை நிறுவனர் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் எப்படி தயாராக வேண்டும் என்பதையும் ஒழுக்கத்தை பற்றியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கினார்.