/* */

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தேர்தலுக்கு 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 549 உதவிதேர்தல்நடத்தும் அலுவலர்கள், 10384 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம்

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்:   கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  ஆலோசனை
X

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோனைக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தேர்தல் பார்வையாளர் .கே.விவேகானந்தன் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 06:102021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பிளர்கள், 412 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் 3,152 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 1,983 வாக்குச்சாவடி மையங்களில் 4,33,841 ஆண் வாக்காளர்கள், 4,77,837 பெண் வாக்காளர்கள், 188 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9,61,914 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்காக 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 549 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 10384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும், ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என்ற வீதத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதிரி நன்னடத்தை விதிகளை பின்பற்றிட 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 180 பகுதிகளில் உள்ள 390 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பும் தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 1800425851) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக திரு.கே.விவேகானந்தன், அவர்கள் நியமிக்கப்பட்டுகள்ளார். இந்திலி வனத்துறை பயணியர் வீடுதிளில் முகாமிட்டுள்ள தேர்தல் பார்வையாளரிடம் பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்களை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நேரில் சந்தித்தும், 9487919207 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 9442291373 என்ற தொடர்பு அலுவலர் கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 வாக்குச்சாவடி மையங்களில் மின் இணைப்பு , போக்குவரத்து வசதிகள், குடிநீர் வதிகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக, சாய்தளங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்கள் தங்கள் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை விரைந்து முடித்து தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டுமென தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.

Updated On: 22 Sep 2021 6:15 PM GMT

Related News