/* */

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் 2ம் கட்ட வாக்குப் பதிவுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் 09.10.2021 அன்று நடைபெறவுள்ள சங்கராபுரம், தியாகதுருகம், சின்ன சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்பா ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி முதற்கட்ட வாக்குப்பதிவு 05.10.2021 அன்று முடிவுற்றது. தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் 09.10.2021 அன்று சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்லாராயன் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவுகள் 1500 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

மேலும், 5 ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 49 வேட்பாளர்களும், 29 ஊராட்சி ஒன்றிய வார்டு ஊறுப்பினர் பதவிக்கு 337 வேட்பாளர்களும், 190 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 605 வேட்பாளர்களும், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,019 வேட்பாளர்களும், ஆக மொத்தம் 1,564 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றார். தேர்தல் பணியில் 198 மண்டகம் அவர்களும் 6,313 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 5 ஊராட்சி ஒன்றியங்கள் 65 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்ப்பதும், தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அன்று இரவே காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

கொரோனா பாதுகாப்பு பொருட்கள் கொண்டு செல்ல வாக்குச்சாவடிக்கு 1 வாகனம் வீதம் 31 சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. தேர்தல்களுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வாக்குச்சாவடி பொருட்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இவை 08.10.2021 அன்று மதியம் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்றடையும்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் வட்டார பார்வையாளர்கள் உதவி இயக்குநர் நிலையில் நியமிக்கப்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கட்டுப்பாட்டில் தேர்தல்கள் உரியவாறு நடைபெறுவதை கண்காணிப்பாளர்கள்.

இரண்டாம் கட்ட தேர்தலில் பதற்றமான 52 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பும், 49 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு கண்காணிப்பும், மற்றும் 50 வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அவர்கள் நுன்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இது தவிர சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 819 வாக்குச்சாவடிகளில் CCTV கேமரா கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் ஆண்கள் 2,44,724 பெண்கள் 2,45,270 மற்றும் இதார் 101 ஆக மொத்தம் 4,90,095 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்யவுள்ளனர்.

பொதுமக்கள்வாக்களிக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போதிய காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அச்சமின்றி தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய.வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...