/* */

மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை: அமைச்சர் ரூ.25,000 நிதியுதவி

ரிஷிவந்தியம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளருக்கு அமைச்சர் எ.வ.வேலு ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை: அமைச்சர் ரூ.25,000 நிதியுதவி
X

கோழிப்பண்ணை உரிமையாளரிடம் ஆறுதல் கூறிய அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜமலையம் கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருடைய கோழிப் பண்ணையில் மழைநீர் சூழ்ந்து கோழிகள் பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அப்பகுதியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு ஆறுதல் கூறி ரூ.25,000 ரொக்கமூம், அரசின் சார்பில் இழப்பீட்டு தொகை கிடைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரட்டாகரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான மக்களிடம் குறைகளைய கேட்டறிந்தார். மேலும் பாதிப்படைந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்பாடு செய்து தருமாறும், மழைநீர் வடிகால் பணி விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மணம்பூண்டி கூட்ரோடு அருகில் வசிக்கும் நரிக்குறவ இன மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து அவர் கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர், ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.

Updated On: 19 Nov 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?