/* */

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான மாவட்ட குழுக் கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை
X

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட குழு உறுப்பினர்களுடனான மாவட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான மாவட்ட குழுக் கூட்டம் நடந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட குழு உறுப்பினர்களுடனான மாவட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். பின்னர், அவர் தெரிவித்ததாவது, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மாற்றுத்திறன் படைத்தவர்களும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வேண்டி வாக்களிக்க ஏதுவாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஊக்குவித்தலுக்கான மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயது நிறைந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். மேலும், வாக்குசாவடி மையம் தரை தளத்தில் அமைக்கவும், நுழைவாயில் மற்றும் வாக்களிக்கும் பெட்டி வரை தடையற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளில் கைப்பிடி போன்ற அனைத்து பாகங்களும் உரிய முறையில் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் காவலர்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருக்க வேண்டும்.

அடையாள அட்டையுடன் வரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறன் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்களிக்கும் பெட்டியில் தாங்களே தொட்டு உணர்ந்து வாக்களிக்க ஏதுவாக பிரெய்லிமொழி அடையாளத்தை பொறிக்கும் முறை உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 24 மணி நேரமும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு சைகை மொழி விளக்கங்களுடன் கூடிய தொடர்பு எண் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

Updated On: 28 March 2024 6:00 AM GMT

Related News